நானும் கோலியும் பேசிக் கொள்வதில்லை: அமித் மிஸ்ரா

கோலி, எப்போது என்னை சந்தித்தாலும் மரியாதையுடன் பேசுவார், ஆனால் தற்போது அந்தச் சூழல் மாறிவிட்டது.
அமித் மிஸ்ரா
அமித் மிஸ்ரா
1 min read

விராட் கோலியின் குணத்தில் நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளதாக இந்திய வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.

இந்திய அணிக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் அமித் மிஸ்ரா. தோனி, கோலி (2015-2017) ஆகியோரின் தலைமையில் இவர் விளையாடி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நியூஸ் புக் யூடியூப் சேனலில் பேசிய அமித் மிஸ்ரா, “கோலி, ரோஹித் சர்மாவின் குணங்கள் வெவ்வேறு” என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது

“கிரிக்கெட் வீரராக கோலியை மதிக்கிறேன். முன்பு போல நானும் அவரும் பேசிக்கொள்வதில்லை. கோலிக்கு ஏன் குறைவான நண்பர்கள் உள்ளார்கள்? கோலி, ரோஹித் சர்மாவின் குணங்கள் வெவ்வேறு.

முதல் நாளில் நான் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அதேபோலவே இன்றும் உள்ளார் ரோஹித் சர்மா. அவரையும் சூழலுக்கு ஏற்றாற்போல மாறுபவரையும் ஒன்றாகக் கூற முடியுமா?

நான் நீண்ட காலமாக இந்திய அணியில் விளையாடவில்லை, இருப்பினும் ரோஹித் என்னிடம் எப்போதும் போல பேசுவார். இந்திய அணியின் கேப்டன் அவர், 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இருப்பினும் அவருடன் நல்ல நட்பு உள்ளது.

விராட் கோலியின் குணத்தில் மாற்றங்களைக் கண்டுள்ளேன். நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட பேசிக்கொள்வதை நிறுத்தி விட்டோம். பேரும் புகழும் அடைபவர்கள், மற்றவர்கள் தங்களிடம் ஆதாயத்துக்காக வருவதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

நான் அப்படிப்பட்டவன் அல்லன். 14 வயது கோலிக்கும் கேப்டனாக உயர்ந்த கோலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எப்போது என்னை சந்தித்தாலும் மரியாதையுடன் பேசுவார், ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டது.

ஷுப்மன் கில்லை நான் கேப்டனாக்கியிருக்க மாட்டேன். அவர் எப்படி என்று ஐபிஎல் போட்டியில் பார்த்துள்ளேன். ஓர் அணிக்கு எப்படித் தலைமை தாங்குவது என்பது பற்றியும் தலைமைப் பண்பு குறித்தும் ஷுப்மன் கில்லுக்கு எதுவும் தெரியாது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in