அம்பத்தி ராயுடு
அம்பத்தி ராயுடு

ரோஹித் போன்ற கேப்டனை அனைத்து அணிகளும் விரும்புவார்கள்: அம்பத்தி ராயுடு

“தற்போது நடந்ததை விட தன்னை நன்றாக நடத்தும் அணிகளுக்கு அவர் செல்வார்”
Published on

தன்னை நன்றாக நடத்தும் அணிக்கு ரோஹித் சர்மா செல்வார் என அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

ஐபிஎல் 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை பாண்டியா வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் தங்களின் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாண்டியா விளையாட வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். இந்நிலையில் மும்பை அனியின் கேப்டன் பதவி குறித்தும், ரோஹித் வேறு அணிக்கு செல்வாரா? என்பது குறித்தும் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“அது முழுக்க முழுக்க ரோஹித்தின் முடிவு. எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது அவர் விருப்பம். ரோஹித் போன்ற கேப்டனை ஐபிஎல்-லில் உள்ள அனைத்து அணிகளும் விரும்புவார்கள். தற்போது நடந்ததை விட தன்னை நன்றாக நடத்தும் அணிகளுக்கு அவர் செல்வார்” என கூறியுள்ளார்.

ரோஹித் தலைமையில் 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

logo
Kizhakku News
kizhakkunews.in