ஆர்சிபி அணியில் நெருக்கடிக்கு ஆளாகும் இளம் வீரர்கள்: ராயுடு குற்றச்சாட்டு

பிரபல பேட்டர்கள் பெரும்பாலான ஓவர்களை எடுத்துக் கொள்கிறார்கள்...
ஆர்சிபி அணியில் நெருக்கடிக்கு ஆளாகும் இளம் வீரர்கள்: ராயுடு குற்றச்சாட்டு
ANI

ஆர்சிபி அணியில் எந்த பெரிய வீரரும் ரன்களை எடுப்பதில்லை என அம்பதி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னௌ அணிகள் பெங்களூருவில் விளையாடின. இந்த ஆட்டத்தில் லக்னௌ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

182 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆர்சிபி அணி 4 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனவே, 153 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேல் வரிசையில் விளையாடிய நட்சத்திர வீரர்களான கோலி, ஃபாப் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல், கிரீன் ஆகியோர் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆர்சிபியின் தோல்வி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதாகவும், பேட்டர்கள் குறைந்த ரன்களையே அடிப்பதாகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பேட்டியில் பேசினார்.

அவர் பேசியதாவது:

“ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமாக ரன்களைக் கொடுப்பதாக நினைக்கிறேன். மேலும் அவர்களின் பேட்டர்களும் அதிகளவில் ரன்களை அடிப்பதில்லை. இதுபோன்ற அணிகளால் கோப்பைகளை வெல்ல முடியாது. ஆர்சிபியிடம் இதனால்தான் ஐபிஎல் கோப்பை இல்லை.

அணியில் உள்ள சர்வதேச வீரர்கள் அதிகமான பங்களிப்பை அளிக்க வேண்டும். அவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? ஆர்சிபி அணியில் இளம் பேட்டர்கள் கீழ்வரிசையில் தான் விளையாடுகிறார்கள். பிரபல பேட்டர்கள் முன்னால் சென்று விளையாடி பெரும்பாலான ஓவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் தினேஷ் கார்த்திக்கும் இளம் பேட்டர்களும் கடைசி ஓவர்களில் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கடந்த 16 வருடங்களாக இந்த நிலைமையே தொடர்கிறது.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in