
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து விளையாடிய வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிரை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
ஃப்ரீஸ்டைல் பிரிவில் எதிரணி வீரரை விட 10 புள்ளிகள் முன்னிலை பெற்றால், அந்த வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இதைத் தொடர்ந்து காலிறுதிச் சுற்று நடைபெற்றது.
இதில் அல்பேனிய வீரர் அபாகரோஃபை எதிர்கொண்ட அமன் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.