
2025 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான முஹமது நபி, 2009 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நபி, இதுவரை 167 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 3600 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 172 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐசிசியின் ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் நபி.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என ஆப்கானிஸ்தான் வாரியத்தின் செயல் அதிகாரி நசீப் கான் சமீபத்தில் கிரிக்பஸிடம் தெரிவித்திருந்தார்.
இத்தகவலை உறுதி செய்துள்ளார் நபி. இது குறித்து பேசிய நபி, “மனதளவில் கடந்த ஒருநாள் உலகக் கோப்பையுடன் நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றவுடன் அப்போட்டியில் விளையாட விரும்பினேன். எனவே, சாம்பியன்ஸ் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
2019-ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற நபி, 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு டி20-யில் மட்டும் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.