
ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷித் கான் அணியை வழிநடத்துகிறார்.
ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்களாக செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேசம், ஹாங் காங் இலங்கை ஆகிய அணிகளுடன் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான்.
ரஷித் கான் தலைமையிலான அணியில் நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்மான், முஹமது நபி உள்ளிட்டோர் பந்தைச் சுழற்றத் தயாராக உள்ளார்கள். வேகப்பந்துவீச்சுக்கு நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கியுடன் ஆல்-ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாயும் இருக்கிறார். பேட்டிங்கில் குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், குல்பதின் நைப் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 9 அன்று ஹாங் காங்கை எதிர்கொள்கிறது. 2025-ல் ஒரு சர்வதேச டி20யில் கூட ஆப்கானிஸ்தான் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் விளையாடவில்லை.
ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கரிம் ஜனத், முஹமது நபி, குல்பதிம் நைப், ஷரஃபுதின் அஷ்ரஃப், முஹமது இஷக், முஜீப் உர் ரஹ்மான், ஏஎம் கஸன்ஃபர், நூர் அஹமது, ஃபரீத் அஹமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
Asia Cup T20 | Team Afghanistan | Afghanistan Squad | Rashid Khan | Naveen Ul Haq