இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி வருகிற செப்டம்பர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், தெ.ஆ. அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாட உள்ளது.
இத்தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீதர் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
2014 முதல் 2021 வரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் பணியாற்றினார்.
54 வயதான ஸ்ரீதர் 1990-களில் ஹைதரபாத் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். 2001 முதல் தனது பயிற்சியாளர் வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர் 2014-ல் இந்திய யு-19 அணியுடனும், ஐபிஎல்-லில் பஞ்சாப் அணியுடனும் பணியாற்றினார்.