பிராவோ
பிராவோ ANI

டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பிராவோ தேர்வு

2022 டிசம்பர் மாதத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ தேர்வு செய்யப்பட்டார்.
Published on

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ செயல்படவுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. ரஷித் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நஜிபுல்லா ஸத்ரான், முஹமது நபி, குல்பதின் நைப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே மே.இ. தீவுகளுக்கு சென்ற நிலையில், விரைவில் 10 நாள் பயிற்சி முகாமைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் பிராவோ அணியுடன் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபில் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்த பிறகு 2022 டிசம்பர் மாதத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ தேர்வு செய்யப்பட்டார். 2023 ஐபில் போட்டியில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in