டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

50 ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை வழிநடத்திய ஹஷ்மதுல்லா ஷாஹிதி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் நடைபெறுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிகளை ஐசிசியிடம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.

ரஷித் கான் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை வழிநடத்திய ஹஷ்மதுல்லா ஷாஹிதி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கவில்லை.

கரிம் ஜனத், முஹமது இஷாக் மற்றும் நூர் அஹமது உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி:

ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நஜிபுல்லா ஸத்ரான், முஹமது இஷாக், முஹமது நபி, குல்பதின் நைப், கரிம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நாங்க்யல் கரோடி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹமது மாலிக்.

செதிக் அடல், ஹஸரதுல்லா ஸஸாய், சலீம் சஃபி ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in