இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் அடில் ரஷித்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார் அடில் ரஷித்.
இங்கிலாந்து அணி தரப்பில் இந்தப் பட்டியலில் ஆண்டர்சன் 269 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
2009 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அடில் ரஷித் தனது 137-வது ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும், ஒருநாள் ஆட்டத்தில் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தார் அடில் ரஷித்.