அபிமன்யு ஈஸ்வரனை நீக்கியதற்கு அவருடைய தந்தை காரணமா?: சந்தேகத்தைக் கிளப்பும் ஸ்ரீகாந்த் | Abhimanyu Easwaran |

இந்திய அணியிலிருந்து கருண் நாயரை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அபிமன்யு ஈஸ்வரனை நீக்கியதற்கு அவருடைய தந்தை காரணமா?: சந்தேகத்தைக் கிளப்பும் ஸ்ரீகாந்த் | Abhimanyu Easwaran |
ANI
2 min read

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கருண் நாயரை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் உள்ளிட்டோர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இந்திய டெஸ்ட் அணி தேர்வு குறித்து ஸ்ரீகாந்த் மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் தங்களுடைய யூடியூப் சேனலில் விவாதித்தார்கள். அப்போது அபிமன்யு ஈஸ்வரன் நீக்கத்துக்கு அவருடைய தந்தையின் கருத்து காரணமாக இருக்குமா என்று ஸ்ரீகாந்த் சந்தேகம் எழுப்பினார்.

"அபிமன்யு ஈஸ்வரன் பாவம்! அவருடைய அப்பா எதோ கருத்து தெரிவித்திருக்கிறார் போல. அதற்காக அபிமன்யு ஈஸ்வரனை அணியிலிருந்து நீக்கிவிட்டார்களா, இல்லையா எனத் தெரியவில்லை" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

இதற்கு, "வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மாற்று தொடக்க பேட்டர் தேவை, இந்தியாவில் நடக்கும்போது மூன்றாவது தொடக்க பேட்டர் தேவையில்லை, கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் தான் தேவை. அதற்காக தான் அக்‌ஷர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று அகர்கர் விளக்கமளித்துள்ளார்" என்று அனிருதா ஸ்ரீகாந்த் பதிலளித்தார். உடனடியாக, இது நியாயமான பார்வை என்று ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டார்.

இதுமட்டுமின்றி, "கடைசி டெஸ்டில் நான் அரை சதம் அடித்தேன், என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என கருண் நாயர் புலம்பியிருக்கிறார்" என்றும் ஸ்ரீகாந்த் பேசினார். மேலும், "கருண் நாயர் இங்கிலாந்தில் மிகச் சிறப்பாகச் செயல்படவில்லை. அவரை அணியிலிருந்து நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை" என்றார் அவர்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிறகு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கருண் நாயர் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

"அணித் தேர்வை நான் எதிர்பார்த்தேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நான் கருத்து கூறுவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை. தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேளுங்கள். நான் பதிலளிப்பது கடினம்.

கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் எல்லோரும் தடுமாறியபோது நான் அரை சதம் அடித்தேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எனவே, அணிக்கு நான் பங்களிப்பு செலுத்தியுள்ளேன். குறிப்பாக இந்தியா வென்ற கடைசி ஆட்டத்தில் பங்காற்றியுள்ளேன்" என்று கருண் நாயர் கூறியிருந்தது கவனம் பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு, அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் அபிமன்யு ஈஸ்வரனின் தேர்வு குறித்துப் பேசியிருந்தார். "ஈஸ்வரனுக்கு நீண்ட நெடிய வாய்ப்பு வழங்கப்படும் என்று கம்பீர் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், உள்நாட்டு கிரிக்கெட்டில் மோசமாகச் செயல்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன. மேலும், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதால், டெஸ்ட் அணியில் வேகமாக இடம்பெறுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

Abhimanyu Easwaran | Srikanth | BCCI | Team India | India Squad | Windies Test Series | West Indies Test Series | Ajit Agarkar | Karun Nair |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in