ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20: இந்தியா அபார வெற்றி | Ind Vs Aus |

ஆஸ்திரேலிய அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தல்...
அக்ஷர் பட்டேல் (கோப்புப்படம்)
அக்ஷர் பட்டேல் (கோப்புப்படம்)ANI
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும் அஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி மழையான ரத்தான நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒன்றுக்கு ஒன்று எனத் தொடர் சமனில் இருந்தது.

இந்நிலையில் நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 28 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷிவம் துபே களமிறங்கினார். அவரும் 18 பந்துகளில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், 10 பந்துகளில் 20 ரன்கள் அடித்து விளாசினார். ஆனாலும் ஆட்டமிழந்தார். அப்போது தொடக்கம் முதலே களத்தில் நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில், 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அக்சர் படேல் அதிரடியாக ஆடிய நிலையில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 167 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி.

168 ரன்கள் இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள். பின்னர், துபே வீசிய பந்தில் மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, மேத்தீவ் சாரட் 25 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Summary

India put in a sensational bowling performance, bundling out Australia for just 119 to clinch victory in the fourth T20I 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in