ஒருநாள் கிரிக்கெட்டில் 346* ரன்கள்: 14 வயது மும்பை வீராங்கனை சாதனை

மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் குவித்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 346* ரன்கள்: 14 வயது மும்பை வீராங்கனை சாதனை
படம்: https://x.com/BCCIdomestic
1 min read

19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்து மும்பையைச் சேர்ந்த ஐரா ஜாதவ் சாதனை படைத்துள்ளார்.

19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் கோப்பைப் போட்டியில் மும்பை, மேகாலயா அணிகள் பெங்களூருவில் அலூர் மைதானத்தில் மோதின. இதில் மும்பையைச் சேர்ந்த 14 வயது ஐரா ஜாதவ் 157 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதில் 42 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் அடக்கம்.

இதன்மூலம், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஐரா ஜாதவ் படைத்துள்ளார்.

இவரும் கேப்டன் ஹர்லியும் இரண்டாவது விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தார்கள். ஹர்லி 116 ரன்கள் விளாசினார்.

அதிரடி பேட்டிங் மூலம் மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் குவித்தது. 564 ரன்கள் என்ற அசாத்தியமான இலக்கை நோக்கி களமிறங்கிய மேகாலயா வெறும் 19 ரன்களுக்குச் சுருண்டது.

இதன்மூலம், மும்பை அணி 544 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19 வயதுக்குள்பட்ட மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்ததில் தென்னாப்பிரிக்காவின் லிஸெல் லீ 2010-ல் ஆட்டமிழக்காமல் 427 ரன்கள் குவித்ததே சாதனையாக உள்ளது.

2025 மகளிர் பிரிமீயர் லீக் ஏலத்தில் ஐரா ஜாதவ் பதிவு செய்திருந்தார். ஆனால், எந்த அணியும் இவரைத் தேர்வு செய்யவில்லை. 19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் மாற்று வீராங்கனையாக மலேசியா பயணிக்கிறார் ஐரா ஜாதவ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in