ஐபிஎல் 2025 போட்டிக்காக அணிகளால் 3 தமிழக வீரர்கள் தக்கவைக்கப்ட்டுள்ளார்கள்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க இன்றே (அக்டோபர் 31) இறுதிநாள். இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகத் தொடங்கின.
ஐபிஎல் அணிகளால் மொத்தம் 3 தமிழக வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குஜராத்
சாய் சுதர்சன் - 8.50 கோடி
ஷாருக் கான் - ரூ. 4 கோடி
கேகேஆர்
வருண் சக்ரவர்த்தி - ரூ. 12 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை.