
ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கேஎல் ராகுல், டு பிளெஸ்ஸி உள்பட மொத்தம் ஐந்து ஐபிஎல் கேப்டன்கள் தக்கவைக்கப்படவில்லை.
ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க இன்றே (அக்டோபர் 31) இறுதிநாள். இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகத் தொடங்கின.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் பல ஆச்சர்யங்களைக் கொடுத்துள்ளன. மூன்று ஐபிஎல் அணிகள் தங்களுடைய கேப்டன்களை விடுவித்துள்ளன. கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர் அந்த அணியால் தக்கவைக்கப்படவில்லை. ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸால் தக்கவைக்கப்படவில்லை. கேஎல் ராகுலை லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் தக்கவைக்கவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டு பிளெஸ்ஸியை விடுவித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியும் இருவரை மட்டுமே தக்கவைத்து, கேப்டனை விடுவித்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ்
தில்லி கேபிடல்ஸில் 4 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அக்ஷர் படேல் - ரூ. 16.5 கோடி
குல்தீப் யாதவ் - ரூ. 13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ. 10 கோடி
அபிஷேக் பொரெல் - ரூ. 4 கோடி
ரிஷப் பந்த், டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்கியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை. தில்லி கேபிடல்ஸிடம் ரூ. 76.25 கோடி மீதமுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தாவில் 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ரிங்கு சிங் - ரூ. 13 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ. 12 கோடி
சுனில் நரைன் - ரூ. 12 கோடி
ஆண்ட்ரே ரஸ்ஸல் - ரூ. 12 கோடி
ஹர்ஷித் ராணா - ரூ. 4 கோடி
ரமண்தீப் சிங் - ரூ. 4 கோடி
ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், ஃபில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை. இன்னும் ரூ. 51 கோடி மீதமுள்ளது.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னௌவில் 5 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வீரராக நிகோலஸ் பூரன் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
நிகோலஸ் பூரன் - ரூ. 21 கோடி
ரவி பிஷ்னாய் - ரூ. 11 கோடி
மயங்க் யாதவ் - ரூ. 11 கோடி
மோசின் கான் - ரூ. 4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ. 4 கோடி
கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டி காக், கிருனாள் பாண்டியா உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை. லக்னௌ வசம் இன்னும் ரூ. 69 கோடி மீதமுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
விராட் கோலி - ரூ. 21 கோடி
ரஜத் படிதார் - ரூ. ரூ. 11 கோடி
யஷ் தயால் - ரூ. 5 கோடி
கிளென் மேக்ஸ்வெல், முஹமது சிராஜ், பாஃப் டு பிளெஸ்ஸி, கேமரூன் கிரீன் உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் மீதமுள்ள தொகை ரூ. 83 கோடி.