2028 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் டி20 கிரிக்கெட்டும் இடம்பெறவுள்ளது. பிராட்மேன், சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா எனப் பல பிரபலங்கள் விளையாடாத ஒலிம்பிக்ஸில் இடம்பெற ஆர்வமாக உள்ளார் ஆஸ்திரேலியாவின் பிரபல பேட்டர் ஸ்டீவன் ஸ்மித்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
தெரியாது, 4 வருடங்களுக்குப் பிறகும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். உலகெங்கிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெறும் வேளையில் மற்ற வீரர்களை விடவும் டி20 கிரிக்கெட்டில் நான் நீண்ட நாள் விளையாட வாய்ப்புள்ளது. பிபிஎல் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். பிறகு மேலும் ஒரு வருடம் தானே, ஒலிம்பிக்ஸில் விளையாடுவது நிச்சயம் நன்றாக இருக்கப் போகிறது என்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.