இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் விவரங்கள்!

ஜிம்பாப்வே, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்திய அணி
இந்திய அணி ANI

2024-ல் அடுத்த 6 மாதங்களில் இந்திய அணி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 6 அணிகளுடன் வெவ்வேறு தொடர்களில் விளையாடவுள்ளது.

2024-25 உள்ளூர் பருவத்துக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. ஏற்கெனவே ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேவுக்கும், நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கும் சென்று இந்திய அணி விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை இறுதியில் இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய அணி புதிய பயிற்சியாளரின் தலைமையில் விளையாடும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது தவிர தெ.ஆ. ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்றும் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் விவரங்களைப் பார்ப்போம்.

2024-25 அட்டவணை

இந்தியா - ஜிம்பாப்வே, 5 டி20 ஆட்டங்கள் (ஜூலை 6 முதல் 14 வரை)

முதல் டி20, ஜுலை 6, ஹராரே

2-வது டி20, ஜுலை 7, ஹராரே

3-வது டி20, ஜுலை 10, ஹராரே

4-வது டி20, ஜுலை 13, ஹராரே

5-வது டி20, ஜுலை 14, ஹராரே

இந்தியா - இலங்கை, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்கள் (ஜூலை - ஆகஸ்ட்)

இந்தியா - வங்கதேசம், 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 ஆட்டங்கள் (செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 12 வரை)

முதல் டெஸ்ட், செப்டம்பர் 19, சென்னை

2-வது டெஸ்ட், செப்டம்பர் 27, கான்பூர்

முதல் டி20, அக்டோபர் 6, தரம்சாலா

2-வது டி20, அக்டோபர் 9, தில்லி

3-வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்,

இந்தியா - நியூசிலாந்து, 3 டெஸ்ட் (அக்டோபர் 16 முதல் நவம்பர் 1 வரை)

முதல் டெஸ்ட், அக்டோபர் 16, பெங்களூரு

2-வது டெஸ்ட், அக்டோபர் 24, புனே

3-வது டெஸ்ட், நவம்பர் 1, மும்பை

இந்தியா - தென்னாப்பிரிக்கா, 4 டி20 ஆட்டங்கள் (நவம்பர் 8 முதல் 15 வரை)

முதல் டி20, நவம்பர் 8, டர்பன்

2-வது டி20, நவம்பர் 10, கெபெர்ஹா

3-வது டி20, நவம்பர் 13, செஞ்சுரியன்

4-வது டி20, நவம்பர் 15, ஜோஹானஸ்பர்க்

இந்தியா - ஆஸ்திரேலியா, 5 டெஸ்ட் (நவம்பர் 22 முதல் ஜனவரி 3 வரை)

முதல் டெஸ்ட், நவம்பர் 22, பெர்த்

2-வது டெஸ்ட், டிசம்பர் 6, அடிலெய்ட்

3-வது டெஸ்ட், டிசம்பர் 14, பிரிஸ்பேன்

4-வது டெஸ்ட், டிசம்பர் 26, மெல்போர்ன்

5-வது டெஸ்ட், ஜனவரி 3, சிட்னி

இந்தியா - இங்கிலாந்து, 5 டி20 3 ஒருநாள் ஆட்டங்கள் (ஜனவரி 22 - பிப்ரவரி 12)

முதல் டி20, ஜனவரி 22, சென்னை

2-வது டி20, ஜனவரி 25, கொல்கத்தா

3-வது டி20, ஜனவரி 28, ராஜ்கோட்

4-வது டி20, ஜனவரி 31, புனே

5-வது டி20, பிப்ரவரி 2, மும்பை

முதல் ஒருநாள், பிப்ரவரி 6, நாக்பூர்

2-வது ஒருநாள், பிப்ரவரி 9, கட்டாக்

3-வது ஒருநாள், பிப்ரவரி 12, அஹமதாபாத்

இதன் பிறகு 2025 மார்ச் மாதத்தில் சாம்பியன்ஸ் கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in