8 நாள்களில் 8 வீரர்கள் மாற்றம்: போட்டியின் நடுவிலேயே மினி ஆக்‌ஷனா?

சிஎஸ்கேவில் புதிதாக வந்த மூவருமே குறுகிய காலத்திலேயே அணியின் நம்பிக்கையாகத் திகழ்கிறார்கள்.
8 நாள்களில் 8 வீரர்கள் மாற்றம்: போட்டியின் நடுவிலேயே மினி ஆக்‌ஷனா?
1 min read

ஐபிஎல் 2025-ல் காயம் காரணமாக இதுவரை 17 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் வீரர்கள் காயமடைவது வழக்கம். வெறுமன கிரிக்கெட் என்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாகப் பயணங்கள் மேற்கொள்வதும் சவாலானதாகப் பார்க்கப்படுகிறது. காயமடைந்த வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் விதிகளில் இடம் உண்டு. ஆனால், ஐபிஎல் 2025-ல் மட்டும் கடந்த 8 நாள்களில் 8 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

சிஎஸ்கேவில் வன்ஷ் பேடிக்கு பதில் உர்வில் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேவில் இவர் மட்டுமா? ருதுராஜ் கெயிக்வாடுக்குப் பதில் ஆயுஷ் மாத்ரேவும் குர்ஜப்னீத் சிங் பதில் டியவால்ட் பிரேவிஸும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். புதிதாக வந்த மூவருமே குறுகிய காலத்திலேயே சிஎஸ்கேவின் நம்பிக்கையாகத் திகழ்கிறார்கள்.

ராஜஸ்தானில் சந்தீப் சர்மா, நிதிஷ் ராணா ஆகியோருக்குப் பதில் இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆர்சிபியில் தேவ்தத் படிக்கல் காயமடைந்ததைத் தொடர்ந்து, மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிக்கு நடுவே வீரர்கள் தொடர்ச்சியாக மாற்றப்படுவது, போட்டிக்கு நடுவே மினி ஆக்‌ஷன் நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக மாற்றப்பட்டுள்ள வீரர்கள் விவரம்

மும்பை இந்தியன்ஸ்

  • அல்லா கஸன்ஃபர் - வெளியே

  • முஜீப் உர் ரஹ்மான் - உள்ளே

  • லிஸாத் வில்லியம்ஸ் - வெளியே

  • கார்பின் பாஷ் - உள்ளே

  • விக்னேஷ் புதூர் - வெளியே

  • ரகு சர்மா - உள்ளே

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • ருதுராஜ் கெயிக்வாட் - வெளியே

  • ஆயுஷ் மாத்ரே - உள்ளே

  • குர்ஜப்னீத் சிங் - வெளியே

  • டியவால்ட் பிரேவிஸ் - உள்ளே

  • வன்ஷ் பேடி - வெளியே

  • உர்வில் படேல் - உள்ளே

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • ஸ்மரன் ரவிச்சந்திரன் - வெளியே

  • ஹர்ஷ் துபே - உள்ளே

  • ஆடம் ஸாம்பா - வெளியே

  • ஸ்மரன் ரவிச்சந்திரன் - உள்ளே

  • பிரைடன் கார்ஸ் - வெளியே

  • வியான் முல்டர் - உள்ளே

குஜராத் டைடன்ஸ்

  • கிளென் ஃபிளிப்ஸ் - வெளியே

  • தசுன் ஷானகா - உள்ளே

தில்லி கேபிடல்ஸ்

  • ஹாரி புரூக் - வெளியே

  • செடிக்குல்லா அடல் - உள்ளே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • உம்ரான் மாலிக் - வெளியே

  • சேதன் சகாரியா - உள்ளே

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • மோசின் கான் - வெளியே

  • ஷார்துல் தாக்குர் - உள்ளே

பஞ்சாப் கிங்ஸ்

  • கிளென் மேக்ஸ்வெல் - வெளியே

  • மிட்ச் ஓவன் - உள்ளே

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நிதிஷ் ராணா - வெளியே

  • வான் பிரிடோரியஸ் - உள்ளே

  • சந்தீப் சர்மா - வெளியே

  • நான்ட்ரே பர்கர் - உள்ளே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • தேவ்தத் படிக்கல் - வெளியே

  • மயங்க் அகர்வால் - உள்ளே

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in