வினேஷ் போகாட் தகுதி நீக்கம்: இறுதிச் சுற்றில் மோதப்போவது யார்?

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஒக்சானா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சுசாகி ஆகியோர் விளையாடவுள்ளனர்.
வினேஷ் போகாட் தகுதி நீக்கம்: இறுதிச் சுற்றில் மோதப்போவது யார்?
வினேஷ் போகாட் தகுதி நீக்கம்: இறுதிச் சுற்றில் மோதப்போவது யார்?
1 min read

ஒலிம்பிக் போட்டியிலிருந்து வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கியூப வீராங்கனை குஸ்மான் அமெரிக்கா வீராங்கனை சாராவுடன் இறுதிச் சுற்றில் மோதவுள்ளார்.

மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு கியூப வீராங்கனை குஸ்மான் தகுதி பெற்றுள்ளதாக ஒலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

அரையிறுதிச் சுற்றில் 5-0 என குஸ்மானைத் தோற்கடித்தார் வினேஷ் போகாட்.

அதேபோல், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஒக்சானா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சுசாகி ஆகியோர் விளையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in