யூரோ கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 17-வது யூரோ கால்பந்து போட்டி ஜெர்மனியில் ஜூன் 14 அன்று தொடங்கியது.
அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளும், நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகளும் மோதின.
ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் 2-1 என்ற கணக்கில் எதிரணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஜூலை 14 அன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரப்படி ஜூலை 15 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, 2020 யூரோ கோப்பையின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி இத்தாலியிடம் தோல்வி கண்டு 2-வது இடத்தைப் பிடித்தது.