பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நாளை நிறைவடையவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் நாளை நிறைவடையவுள்ள நிலையில் பதக்கப் பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 111 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா.
அடுத்ததாக, 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், கிரேட் பிரட்டன் ஆகிய நாடுகள் முறையே 3,4,5 ஆகிய இடங்களில் உள்ளன.
இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் 69-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2020-ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா.
38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 89 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது சீனா.
இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் 48-வது இடத்தைப் பிடித்தது.