ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகாட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, நேற்று இரவு உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வினேஷ் போகாட் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.