தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி இன்று (செப். 11) தொடங்கி செப். 13 வரை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
இந்திய தடகள கூட்டமைப்பின் ஆதரவுடன் இப்போட்டியை தமிழ்நாடு தடகள சங்கம் நடத்துகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டியை தமிழக தடகள சங்கம் நடத்த உள்ளது.
இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 62 வீரர்கள் உட்பட இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவு என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.