ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி!

சாத்விக் - சிராக் இணை 21-13, 14-21, 21-16 என்கிற கேம் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி!
ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி!ANI
1 min read

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் காலிறுதியில் சாத்விக் - சிராக் இணை தோல்வி அடைந்துள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 6-வது நாளான இன்று பாட்மிண்டன் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் விளையாடிய சாத்விக் - சிராக் இணை 21-13, 14-21, 21-16 என்கிற கேம் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

முதல் கேமை இந்திய வீரர்கள் எளிதில் வென்றாலும், அடுத்த இரண்டு கேம்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. இறுதியில் சாத்விக் - சிராக் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in