
வீரர்களைத் தக்கவைப்பதில் ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தனது முடிவும் இருக்கும் என்று தோனி பேசியுள்ளார்.
ஐபிஎல் 2025-ல் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி பல கோடி ரசிகர்களுக்கு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாகக் காயத்துடன் தோனி விளையாடியதால், அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
ஐபிஎல் 2024-க்கு பிறகு அவர் விளையாட மாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், “அணியின் நலன் கருதி முடிவெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ஹைதராபதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, “ஐபிஎல் தொடங்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. வீரர்களைத் தக்கவைப்பதில் ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவைப் பார்க்க வேண்டும். தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. விதிமுறைகள் முறையாக வகுக்கப்பட்ட பிறகு, அணியின் நலன் கருதி முடிவெடுப்பேன்” என்றார்.