டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணை எப்போது?

1 min read

டிஎன்பிஎஸ்சி-யில் வருடாந்திர கால அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிநாட்டு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படுகிறார்கள். வருடாந்திரத் தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நிறுவனம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில் தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.

2024-ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணை டிசம்பர் 15-க்கு முன்பே வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் இன்று வரை கால அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால் அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள், தேர்வுகளுக்குத் திட்டமிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) போன்றவை அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுவிட்டன என்பதால் டிஎன்பிஎஸ்சி-யில் வருடாந்திர கால அட்டவணையை விரைவில் வெளியிட வேண்டும் எனத் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி 25 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி - குரூப் 2 மெயின் தேர்வுகளின் முடிவுகள், ஜனவரி 12 அன்று வெளியாகும் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதவிர குரூப் 1 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in