டபிள்யுபிஎல் 2024: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற தில்லி அணி

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகின்றன.
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற தில்லி அணி
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற தில்லி அணிANI

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது தில்லி கேபிடல்ஸ் அணி.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆரம்பம் முதல் தடுமாறிய குஜராத் அணி 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து பாரதி ஃபுல்மாலி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஃபுல்மாலி 7 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேற அவருடன் ஜோடி சேர்ந்த கேத்ரின் பிரைஸ் 28 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. தில்லி அணியில் காப், சிகா பாண்டே மற்றும் மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணிக்கு ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார் ஷெஃபாலி வெர்மா. கேப்டன் மெக் லேனிங் 18 ரன்களிலும், கேப்ஸி ரன் எதுவும் எடுக்கமாலும் வெளியேறினர். இதன் பிறகு ஷெஃபாலி வெர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி அமைத்தனர். ஷெஃபாலி வெர்மா 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் 71 ரன்கள் விளாசி வெளியேறினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தில்லி அணி 13.1 ஓவர்களில் இழக்கை எட்டி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் 2-வது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நாளை எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி தில்லி அணியுடன் இறுதிச்சுற்றில் விளையாடும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in