விராட் கோலி
விராட் கோலிANI

டி20-ல் புதிய சாதனையைப் படைக்க போகும் விராட் கோலி

டி20-ல் விராட் கோலி இதுவரை 375 ஆட்டங்களில் 11194 ரன்கள் குவித்துள்ளார்
Published on

இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் எடுத்தால், டி20-ல் 12000 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார் விராட் கோலி.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் அடித்தால், டி20-ல் 12000 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார். ஏற்கெனவே சர்வதேச டி20 ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோலி. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு சாதனையை படைக்கப் போகிறார் விராட் கோலி.

ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளையும் சேர்த்து சர்வதேச அளவில் அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 14562 ரன்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரான கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள விராட் கோலி இதுவரை 375 ஆட்டங்களில் 11194 ரன்கள் குவித்துள்ளார். இப்பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் சர்மா 11035 ரன்களுடன் 8-வது இடத்தில் உள்ளார். இன்று நடக்கும் ஆட்டத்தில் மேலும் 6 ரன்களை அடித்தால் டி20-ல் 12000 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார் விராட் கோலி.

logo
Kizhakku News
kizhakkunews.in