உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்ANI

விஜய் அரசியல் பிரவேசம்: உதயநிதி, அண்ணாமலை வாழ்த்து

நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Published on

நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு, தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவதற்கான உரிமை இருக்கிறது. இந்நிலையில் இந்த முடிவை எடுத்த விஜய்க்குப் பாராட்டுகள். விஜயின் மக்கள் பணி சிறக்கட்டும்” என்றார்.

விஜயின் புதிய அரசியல் கட்சி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் கூறியதாவது: “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in