2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
தமிநாட்டு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படுகிறார்கள். வருடாந்திரத் தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நிறுவனம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில் தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) போன்றவை அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு விட்டன. இந்நிலையில் 2024-ம் வருடத்துக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும். ஜுலையில் தேர்வு நடத்தப்படும்.
* குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2024 ஜனவரியில் வெளியிடப்படும். தேர்வு, ஜுன் மாதம் நடத்தப்படும்.
* குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும்.
* தமிழ் மொழித்தாள் கட்டாயம். 40% எடுத்தால் மட்டுமே தேர்ச்சி. பாடத்திட்டம் 10-ம் வகுப்புத் தரத்தில் இருக்கும். தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறவில்லையென்றால் இதர மொழித் தாள்கள் மதிப்பீட்டு செய்யப்படாது.