தேர்தல் பத்திரங்கள்: எஸ்பிஐ மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

தேர்தல் பத்திர விவரங்களை நாளை (மார்ச் 12) மாலைக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI
1 min read

தேர்தல் பத்திர விவரங்களை நாளை (மார்ச் 12) மாலைக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றம் பிப். 15 அன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய தகவல்களையும் மார்ச் 6-க்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது.

எனினும் தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் தேவை என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்நிலையில் நான்கு மாத காலம் அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவின் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திர விவரங்களை நாளை (மார்ச் 12) மாலைக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் எஸ்பிஐ வழங்கிய விவரங்களை மார்ச் 15-க்குள் தங்கள் இணையத்தில் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in