கிளாஸன்
கிளாஸன்@icc

டெஸ்டிலிருந்து தெ.ஆ. வீரர் கிளாஸன் ஓய்வு

2019-ல் முதல் டெஸ்டில் விளையாடிய கிளாஸன் கடந்த 4 ஆண்டுகளில் 4 டெஸ்டில் மட்டுமே விளையாடினார்
Published on

தென்னாப்பிரிக்க வீரரான கிளாஸன் டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2019-ல் முதல் டெஸ்டில் விளையாடிய கிளாஸன் கடந்த 4 ஆண்டுகளில் 4 டெஸ்டில் மட்டுமே விளையாடினார்.

தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான கிளாஸன் 2019-ல் டெஸ்டில் அறிமுகமானார். வெறும் 4 டெஸ்டில் விளையாடி104 ரன்களை அடித்துள்ள இவர், கடைசியாக 2023 மார்ச் மாதத்தில் டெஸ்டில் விளையாடினார்.

கடந்த பிப்ரவரியில் அணியில் வெரைன் அல்லது கிளாஸனில் யாரை தேர்வு செய்வது என்ற கேள்வி வரும் போது, தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் கிளாஸனை பரிந்துரை செய்துள்ளார். அத்தொடரில் கிளாஸன் 4 இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்தார்.

சமீபத்தில் நடந்த இந்திய தொடரில் கிளாஸனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் நடக்கும் மற்ற டெஸ்ட் தொடர்களில் கிளாஸன் விளையாடுவார் என ஷுக்ரி கான்ராட் தெரிவித்திருந்த்தார். இந்நிலையில் டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் கிளாஸன். இனி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் பங்கேற்பார் கிளாஸன்.

தன்னுடைய ஓய்வு குறித்து கிளாஸன் பேசியதாவது : “சில தூங்காத இரவுகளுக்குப் பிறகு நான் எடுத்தது சரியான முடிவா என சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். டெஸ்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவு".

“களத்திற்கு வெளியிலும் மற்றும் களத்திற்குள் நான் சந்த்தித சவால்களே இன்று என்னை ஒரு நல்ல வீரராக மாற்றியுள்ளது. இது ஒரு அற்புதமான பயணம். எனக்கு வழங்கப்பட்ட முதல் டெஸ்ட் தொப்பியை விலைமதிக்க முடியாத தொப்பியாக கருதிகிறேன்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in