சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

அயலான்
அயலான்@Siva_Kartikeyan
1 min read

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்திற்க்குத் தணிக்கையில் ‘யு’ கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு போன்ற பலர் நடிப்பில் ஜன.12 அன்று வெளியாகவிருக்கும் படம் ‘அயலான்’. இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

பொதுவாகவே சிவகார்த்திகேயனின் படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக இருக்கும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை என இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

தற்போது அதற்கேற்ப அயலான் படத்திற்க்குத் தணிக்கையில் ‘யு’ கிடைத்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in