சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை: ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனது மகள் ஐஸ்வர்யா பேசியது சரி என விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்ANI
1 min read

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனது மகள் ஐஸ்வர்யா பேசியது சரி என விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என் அப்பாவை சங்கி என்று அழைக்கும் போது கோபம் வரும் என்றும், அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் எனவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “எனது மகள் ஐஸ்வர்யா பேசியது சரி” என விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.

இது குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது: “சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சங்கி என்ற விமர்சனம் குறித்து எனது மகள் ஐஸ்வர்யா பேசியது சரியே” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in