ஜடேஜா
ஜடேஜாANI

இங்கிலாந்து தொடர்: 2-வது டெஸ்டிலிருந்து ஜடேஜா, ராகுல் விலகல்

அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான் மற்றும் சவுரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து காயம் காரணமாக ஜடேஜா, ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான் மற்றும் சவுரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் பிப். 2 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்டிலிருந்து காயம் காரணமாக ஜடேஜா, ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான் மற்றும் சவுரப் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது. முதல் டெஸ்டில் ராகுல் ஒரு அரைசதம் அடித்தார், ஜடேஜா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2-வது டெஸ்டில் இவர்களுக்குப் பதிலாக குல்தீப் யாதவும், ரஜத் பட்டிதாரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in