விஜய்காந்தின் மகன் படத்தில் நடிக்கத் தயார் - ராகவா லாரன்ஸ்

சண்முக பாண்டியனின் படம் வெளியாகும் பொழுது அந்த படத்திற்கு தேவையான விளம்பரங்களை நானே இறங்கி செய்யலாம் என சிந்திக்கிறேன்.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்@offl_Lawrence
1 min read

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த 28 அன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது நினைவிடத்திற்குச் சென்று ராகவா லாரன்ஸ் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் ஒரு காணொளியில் பேசியதாவது:

“நான் என்னுடைய அம்மாவுடன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்றிருந்தேன். அதன் பிறகு அவரது வீட்டிற்கும் சென்றோம். அங்கு அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் உள்ளிட்டோர் இருந்தார்கள். அங்கிருந்த விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவின் சகோதரி, சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார், அவரை நீங்கள் தான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

அந்த ஒரு வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் அவர்கள் திரையுலகில் செய்த உதவிகள் ஏராளம். அப்படி இருக்கும் போது, அவரின் மகன்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் விஜயகாந்துடன் சேர்ந்து ஒரு பாடலில் வேலை செய்தேன், அவர் என்னை நிறைய பாராட்டி இருக்கிறார்.

சண்முக பாண்டியனின் படம் வெளியாகும் பொழுது அந்த படத்திற்கு தேவையான விளம்பரங்களை நானே இறங்கி செய்யலாம் என சிந்திக்கிறேன். அதேபோல படக்குழுவினர் சம்மதித்தால், அவருடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன். மேலும் இரண்டு கதாநாயகர்கள் கொண்ட படமாக இருந்தால் அவருடன் இணைந்து, மற்றொரு கதாநாயகனாக நடிக்கவும் தயாராக உள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in