கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம்
கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம்

புதுச்சேரி: கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம்

இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
Published on

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். புகார் அளித்தும், காவலர்கள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிறகு, காணாமல்போன சிறுமி முத்தியால்பேட்டையில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடற்கூராய்வு நடைபெற்றதைத் தொடர்ந்து சிறுமியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்தார்கள். இதன் பிறகு முதல்வர் ரங்கசாமி சிறுமியின் தந்தையை நேரில் அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தையின் முடிவில் சிறுமியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமாக அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in