பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’

இப்படத்தின் முதல் பார்வை டீசர் தமிழில் 702 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
 டீன்ஸ்
டீன்ஸ்@immancomposer
1 min read

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘டீன்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த ஒரு காணொளியை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

வித்தியாசமான முறையில் படங்களை இயக்குபவர் இயக்குநர் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கிய ‘இரவின் நிழல்’ 2022-ல் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் ‘டீன்ஸ்’ ஹாரர்-த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பல இளைஞர்கள் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களுக்கான வரிகளையும் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் புது முயற்சியாக இப்படத்தின் முதல் பார்வை டீசர் தமிழில் 702 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in