ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம் @OfficeOfOPS

சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம்

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் எம்எல்ஏ-க்கள் ஆர்.பி. உதயகுமாரை எதிர்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இதன்பிறகு, எதிர்கட்சித் துணைத் தலைவரின் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்றுகூட வலியுறுத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கை இன்று இரண்டாவது வரிசையில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் இருக்கைக்கு அருகே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சித் துணைத் தலைவரின் இருக்கை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in