ஹரியானா புதிய முதல்வராக நாயப் சிங் சைனி தேர்வு

இன்று மாலை அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா புதிய முதல்வராக நாயப் சிங் சைனி தேர்வு
ஹரியானா புதிய முதல்வராக நாயப் சிங் சைனி தேர்வுANI
1 min read

ஹரியானாவின் புதிய முதல்வராக பாஜகவின் மாநிலத் தலைவர் நாயப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

சுயேச்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவின் மாநிலத் தலைவர் நாயப் சிங் சைனி புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார் நாயப் சிங் சைனி. மேலும் இன்று மாலை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in