ஹரியானா முதல்வராக நாயப் சிங் சைனி பதவியேற்றார்

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஹரியானா முதல்வராக நாயப் சிங் சைனி பதவியேற்றார்
ஹரியானா முதல்வராக நாயப் சிங் சைனி பதவியேற்றார்@DPR Haryana
1 min read

ஹரியானாவின் புதிய முதல்வராக பாஜக மாநிலத் தலைவர் நாயப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.

ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

சுயேச்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவின் மாநிலத் தலைவர் நாயப் சிங் சைனி புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நாயப் சிங் சைனி.

இந்நிலையில் ஹரியானாவின் முதல்வராக நாயப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in