ஐசிசி ஒருநாள் தரவரிசை: நெ.1 ஆல் ரவுண்டரான முஹமது நபி

5 வருடமாக முதலிடத்தில் இருந்த ஷகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் முஹமது நபி.
முஹமது நபி
முஹமது நபி@icc
1 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான முஹமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஐசிசியின் ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த வயதான வீரர் எனும் பெருமையைப் பெற்றார் நபி. நபியின் வயது 39 ஆகும்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சமீபத்தில் சதம் அடித்து அசத்தினார் முஹமது நபி. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நெ.1 ஆல் ரவுண்டர் இடத்திற்கு முன்னேறினார் முகமது நபி. கடந்த 5 வருடமாக ஒருநாள் தரவரிசையில் நெ.1 ஆல் ரவுண்டராக இருந்தார் ஷகிப் அல் ஹசன். அவர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு வங்கதேச அணிக்காக விளையாடவில்லை.

மேலும் முஹமது நபி ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி உள்ளார். 8-வது இடத்தில் இருந்த நபி தற்போது 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in