தமிழில் பேசும் பிரதமர் மோடி: பாஜக புதிய ஏற்பாடு

செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரையை தமிழில் இனி கேட்கலாம்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி@NarendraModi

நமோ இன் தமிழ் (@NaMoInTamil) என்கிற எக்ஸ் தளத்தின் மூலம் பிரதமர் மோடியின் உரையைத் தமிழில் இனி கேட்கலாம்.

கன்னியாகுமரியில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தமாக உள்ளது. இதனை சரிசெய்ய உங்களிடம் நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் பேசப்போகிறேன்” என கூறினார்.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரையை தமிழில் கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமோ இன் தமிழ் (@NaMoInTamil) என்கிற எக்ஸ் தளத்தின் மூலம் பிரதமர் மோடியின் உரையைத் தமிழில் இனி கேட்கலாம்.

நமோ இன் தமிழ் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

அண்ணாமலை பேசியதாவது:

“பிரதமர் மோடியின் உரையை ‘நமோ இன் தமிழ்’ என்கிற எக்ஸ் தளத்தில், அவரது குரலில் அதே உணர்வுடன் காணொளியாக பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரையை தமிழில் கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியை நீங்கள் அனைவருக்கும் பகிரவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் எந்தப் பகுதியில் பிரதமர் பேசினாலும் அதைத் தமிழில் கேட்கும்படி இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியது உங்கள் கடமை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in