மதுபோதையில் காரை ஓட்டினாரா நடிகை மதுமிதா? - காவல் துறையினர் விளக்கம்

மதுமிதாவிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது. அவர் குடிபோதையில் இல்லை.
மதுமிதா
மதுமிதா @madhumitha.h_official
1 min read

மதுமிதா மதுபோதையில் காரை ஓட்டி காவலரை இடித்ததாக தகவல் பரவிய நிலையில் அது தவறான தகவல் என தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை மதுமிதா, கடந்த 21 அன்று தனது நண்பரின் புதிய காரை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜை போடுவதற்காக அவருடன் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் வீடு திரும்பியபோது காரை மதுமிதா ஓட்டியதாகவும், அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிகுமார் என்பவர் மீது கார் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரவிகுமாருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தான் வந்த பாதையில் மெட்ரொ பணிகள் நடந்துக் கொண்டிருந்ததால் காரை திருப்பி எதிர்திசையில் சென்ற போது இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து நடிகை மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுமிதா மதுபோதையில் காரை ஓட்டி காவலரை இடித்ததாக தகவல் பரவிய நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த உதவி ஆய்வாளர் திருமுருகன், “விபத்து ஏற்பட்ட கார் மதுமிதாவின் நண்பருடையது. புதிய காரை வாங்கி பூஜை போட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் போது, காவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுமிதாவிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது. அவர் குடிபோதையில் இல்லை” என விளக்கமளித்ததாக தெரிகிறது.

மேலும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடிகை மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “நான் நலமாக இருக்கிறேன். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in