இசை ஆல்பத்தில் இணையும் கமல், லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன்

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ஆல்பத்திற்கு “இனிமேல்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இசை ஆல்பத்தில் இணையும் கமல், லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன்
@RKFI
1 min read

கமல், லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன் என்கிற புதிய கூட்டணி இசை ஆல்பத்துக்காக இணைந்துள்ளது.

கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் இடம்பெற்ற போஸ்டர் ஒன்றைக் கடந்த மாதம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஷ்ருதி ஹாசனும், லோகேஷ் கனகராஜும் இசை ஆல்பம் ஒன்றுக்காக இணைவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இசை ஆல்பத்தில் கமல், லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனிமேல் என்கிற இசை ஆல்பத்தில் கமல் ஹாசன் பாடல்கள் எழுத லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். ஷருதி ஹாசன் இசையமைக்கிறார். இந்தப் புதிய கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

துவாரகேஷ் பிரபாகர் இந்த இசை ஆல்பத்தின் இயக்குநராக உள்ளார். புவன் கோடா, ஒளிப்பதிவாளர்.

logo
Kizhakku News
kizhakkunews.in