லால் சலாம்: ஜன.26 அன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழா

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26 அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லால் சலாம்
லால் சலாம்@LycaProductions
1 min read

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26 அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற பலர் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் பிப்.9 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26 அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in