கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்@iKeerthiPandian

அரசியல் பேசினால் என்ன தப்பு? : கீர்த்தி பாண்டியன்

“அனைத்திலும் அரசியல் உண்டு” என ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் கீர்த்தி பாண்டியன்.
Published on

“அனைத்திலும் அரசியல் உண்டு” என ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் கீர்த்தி பாண்டியன்.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெயகுமார் இயக்கத்தில் அஷோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள‘ப்ளூ ஸ்டார்’ படம் ஜன. 25 அன்று வெளியாகிறது.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கீர்த்தி பாண்டியன் பேசியதாவது, “பா.ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களா? என கேட்கின்றனர். பேசினால் என்ன தப்பு?. நாம் அணியும் துணி, சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் தண்ணீர் என அனைத்திலும் அரசியல் உள்ளது. அதைப் பற்றிப் பேசவில்லை என்றால் அதைப் புறக்கணிப்பதாக அருத்தம். இப்படத்திலும் அரசியல் உண்டு. பா.ரஞ்சித்தின் படத்தில் சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் முக்கியமானவை. அந்த வகையில் அவர் படத்தில் நான் நடித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் நம் படத்தில் இடம்பெற்றுள்ள அறிவு எழுதிய “காலு மேல காலு போடு ராவண குலமே மேல ஏறும் காலாமாச்சு ஏறியாகணுமே” என்ற பாடல் வரிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

logo
Kizhakku News
kizhakkunews.in