‘கமல் 237’: இயக்குநர்களாகக் களமிறங்கும் அன்பறிவ்

2025-ல் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்து வேறு எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.
கமல் 237
கமல் 237@ikamalhaasan
1 min read

இந்தியன்- 2, கல்கி, தக் லைஃப், இயக்குநர் வினோத் படம் எனப் பல படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன், மற்றொரு பட அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அன்பறிவ். அன்பு, அறிவு ஆகிய சகோதர்கள் அன்பறிவ் என்கிற பெயரில் பணியாற்றி வருகிறார்கள். விக்ரம், லியோ, பீஸ்ட், கேஜிஎஃப் உட்பட பல படங்களில் பணிபுரிந்து தேசிய விருதை வென்றுள்ள நிலையில், முதன்முதலாக ஒரு படத்தை இயக்கவுள்ளார்கள். அதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அன்பறிவ் இயக்குவதால் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 2025-ல் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்து வேறு எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.

‘கமல் 237’ குறித்து x தளத்தில் கமல் கூறியதாவது:

“சாதனை புரிந்துள்ள திறமைசாலிகள் இருவரை இயக்குநர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். மீண்டும் உங்களை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வரவேற்கிறது” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in