லோக்பால் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்

லோக்பால் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்

லோக்பால் தலைவராக முன்னாள் நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Published on

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் போன்றோர் தொடர்பான ஊழல்களை விசாரிப்பது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் மே 2022-ல் முடிவடைந்தது. பிறகு முழுநேரத் தலைவர் இன்றி லோக்பால் அமைப்பு இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த அமைப்பின் புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022 ஜூலையில் ஓய்வு பெற்றார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லோக்பால் அமைப்புக்கு மூன்று நீதித்துறை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் லிங்கப்ப நாராயண சுவாமி, நீதிபதி சஞ்சய் யாதவ், நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில், லோக்பால் அமைப்பின் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக சுஷில் சந்திரா, பங்கஜ் குமார், அஜய் திர்கி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in