அவதூறு பேச்சு தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை: நடிகை த்ரிஷா அறிவிப்பு

கவனம் பெறுவதற்காக சிலர் தரக்குறைவாகப் பேசுவது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அவதூறு பேச்சு தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷாANI
1 min read

கூவத்தூர் விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு பேசிய விவகாரம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா தன்னுடைய X தளத்தில் கூறியதாவது: “ கவனம் பெறுவதற்காக சிலர் மீண்டும் மீண்டும் தரக்குறைவாகப் பேசுவது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அவர்கள் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி நான் பேச வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்டப்பிரிவு மேற்கொள்ளும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in